Friday, October 21, 2022

கரைந்தழியும் மனது..

ஒவ்வொரு தடவையும் 

உன்னிலிருந்து விலக எத்தனித்து 

நடுவில் ஒன்றை நிறுத்தி 

தன்னைத் திரட்டியெடுத்து 

தனியே நிற்கிறது மனது..

ஆனாலும் அதையும் 

மீறிய ஒன்று அந்த 

மனதை உடைத்து சுக்கல்களாக்கி 

மீண்டும் உன்னிலேயே 

மேலும் மேலுமெனக் 

கரைந்தழியச் செய்கிறது....

No comments:

Post a Comment

முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...