நிலவு தோய்ந்த கடற்கரை
அதில்
நிலவிலாடிய இருவர் மட்டும்
அலை கொண்ட கடலும்
உள்ளோடிய மூச்சும் மட்டுமே
உயிர்ப்பை உணர்த்த
ஆயிரமாயிரம்
ஆண்டுக காதலின்
ஏக்கமும் தவிப்பும் தாபமும்
இரு சிலைகளாய் வரித்துவிட
உதடுகள் பேசவில்லை
கண்களும் பேசவில்லை
இதயங்கள் மட்டும்
பேசிக்கொண்டே இருந்தன
இன்னும் ஆயிரமாயிரமாண்டுக்
காதலுக்கும் சேர்த்து…
No comments:
Post a Comment