Saturday, September 10, 2022

சாபவிமோசனம்

கருவறை திறந்ததும் காணும் 
கடவுளின் காட்சிபோல் 

உனைக் கண்டதும் 

இதயம் பொங்கிக் கண்ணீராய் வழிய 

ஒருகணம் உறைந்துபோய் 

உன்னில் நான் வேறல்ல 

உன் அன்பின் சிறுதுளி நானென்றுணர்வது 

வெறும் கற்பனையென்றாகுமா என் 

இதயக்கமலவாசனே…


உன்னுள் நிறைந்த அன்பே 

உன் அழகாகப் பொலிகிறதோ…


வார்த்தைகளின்றி 

தொலைந்துபோய்விடடேன் 

எனை மீடடெடுக்க 

என்னால் முடியவில்லை 

ஒவ்வொரு முறையும் 

தவணைமுறையில் எனைத் 

தொலைப்பதுதான் என் சாபமா..

ஆனாலும் இதிலிருந்து 

வேண்டேன் ஒருபோதும் 

சாபவிமோசனம்…

No comments:

Post a Comment

முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...