Saturday, October 29, 2022

அன்னையைத் தேடும் குழந்தை

ஓடி ஓடிக் களைத்துச் சோர்ந்துவிடட 

குழந்தைபோல் மனமும் 

சுருண்டு படுத்துக் கொண்டுவிடவே 

துடிக்கிறது

இயல்பாய் சுருண்டுகொள்ளும் 

பூனைக்குட்டிபோல் உன் மடியில்...

அன்னையைத் தேடும் குழந்தைபோல் 

உனைத் தேடுகிறேனின்று 

இன்னோர் குழந்தையாய் எனையுன் 

மடிசேர்த்துக் கொள்வாயா 

ஆண்டவனே...

No comments:

Post a Comment

முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...