Friday, August 12, 2022

என் தோழனே..

 

முகிலிழுத்து முகமறைக்கும் 

முழுநிலவுபோல

உன்னிடமிருந்து மட்டுமல்ல 

என்னிடமிருந்தே எனை 

மறைத்துக்கொள்ள விழைகிறேன் 

ஆனாலும் நீ 

என்னுள்ளிருந்தே விஸ்வரூபமெடுக்கிறாய் 

தோழனென்று கூறியுனை 

அயலில் நிறுத்திவிடவே முயல்கிறேன் 

அயலானல்லடி நானுனக்கு 

உன் ஆத்மாவேதான் என 

என் உள்ளிருந்து செல்லமறுத்து 

அடம்பிடிக்கிறாய் நீ...

No comments:

Post a Comment

முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...