Wednesday, November 24, 2021

புரியாத புதிரோ நீ....

 உன்னை இனித் தேடேன் 

என்னை நீ பார்க்காதே என்றால் 

எதிரில் வந்து நின்றுன் புன்னகையால் 

எனைக்கொல்வாய் 

நீயே எல்லாம் என்று 

நானுனைத் தேடிவந்தால் 

கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாது 

ஒளிந்தோடி விடுவாய் 

என்னை முழுவதுமாய் புரிந்து கொண்டவன் 

நீதான் ஆனாலும்  என்னால் 

உன்னைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே

என்னால் என்னையே  

புரிந்துகொள்ள முடியாதபோது 

உன்னைப் புரிந்துகொள்வது 

எவ்வாறு......???


Friday, November 19, 2021

ஒரே பார்வை.....

 ஊடல்கொண்ட பொழுதில் 

மீண்டும் நீவந்தென் 

கையோடு கைசேர்த்த வேளையில் 

மனதில் ஆயிரம் மின்னல்கள்......... 

என் கர்வம் என் பிடிவாதம் அனைத்துமே

உன் ஒரே பார்வையில் 

கரைந்தோடிவிட என்னை மறந்து நான் 

உன் தோள்களில் சிறுகுழந்தையாய்.......

என் கண்ணன்...

கண்ணா உன்னுடன் 

இருப்பது உன் நிழலேயானாலும் 

நான் பொறாமை கொள்வேன்...

ஆனாலும் நான் 

கொடுத்துவைத்தவளே...

ஏனெனில் 

என் மனதில் நிரந்தரமாகவே 

குடியிருப்பவனல்லவா நீ...

Thursday, November 18, 2021

தொலைந்துபோனவள்.....

 

என்னுள்ளே உருவான நேசமொன்று 

பூத்துக் குலுங்கி 

மணம்பரப்பிய வேளையில்....

அந்தப் பூங்காட்டில் நுழைந்து எனைப் 

பூப்போலக் கொய்தான் ஒருவன்...

எங்கும் இளகாத என்மனதும் உருகி 

நான் அவனிடம் இழைந்த வேளையில் 

என்னுள்ளே அதிசயித்து ...

எவருக்கும் இளகாது 

கல் போலிருந்த என்மனதை 

பூப்போலாக்கி சூட்டிக் கொண்டாயே 

"யாரடா நீ" என்றேன் 

மெல்லச் சிரித்து......

"அவனே நான்" என்றென்னைத்  

தனதாக்கிக் கொண்டான்...

அந்தக் குறும்புப் புன்னகையில் 

அவனுள் நான் தொலைந்து போனேன்.....


முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...