என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு
என்னுள் ஏக்கங்களை விதைக்க
தீராத உன் நினைவுகளுடன்
போராடிக்கொண்டு நான்...
எதை மறப்பினும் உனை மறவேனென
உள்ளம் அடம்பிடிக்க...
நீயென்றும் நானென்றும்
எதற்கிந்த ஆடல் கண்ணா...
உன்னையும் வேண்டேன்
என்னையும் வேண்டேன்
ஏதும் மீதமின்றி
உன்னுள் கரைந்தழிதலொன்றுதான்
என் முழுமையென்றாகுமா
இதயக்கமலவாசா.…