அட்டமி நிலவுபோல்
இதயமும் பாதியாய்...
ஒரு பாதி உனக்கென ஏங்க,
மறு பாதியோ..
ஏக்கம் தந்த இனிமையில் திளைக்க..
பெண்ணெனும் பிறப்பே இதற்குத்தானா...
மீராவாக ராதையாக கோதையாக..
மீண்டும் மீண்டும்
பெண்ணெனவே உன்னைத் தொடர
பிறவிகள் எடுப்பேன் உனக்கெனவே..
உனை நினைத்து ஏங்க
இந்த ஒன்றல்ல
இன்னும் ஓராயிரம் பிறவிகள் போதாது
என் இதயக் கமலவாசனே...
No comments:
Post a Comment